வள்ளுவர் கோட்டம்

பொது

செம்மொழிப் புலவர் திருவள்ளுவருக்கு கட்டப்பட்ட நினைவகம். வள்ளுவர் கோட்டம் சென்னை மத்திய பகுதியான நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ளது. வள்ளுவர் கோட்டம் 1976ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

இதன் அமைப்பானது கோவிலை போல் காட்சி அள்ளிக்கிறது. இதில் திருவாரூர் தேர் போன்ற அமைப்பு கொண்ட கற்கலால் ஆன தேர் மற்றும் யானை இழுக்கும் அமைப்பு கொண்டது. ஆத்தேரை சுற்றிலும் ஒவ்வொரு அதிகாரத்தை குறிக்கும் காட்சி கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இத்தேரின் மேற்பகுதியில் திருவள்ளுவர் உருவ சிலை அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் முன்பு ஒரு அரங்கம் அமைந்துள்ளது. அதில் ஒரே நேரத்தில் நான்காயிரம் பேர் (4000) அமரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வரங்த்தின் மேற்தளம் ஒன்று உள்ளது. அதில் அனைத்து திருக்குறள் மற்றும் அதன் மைய கருத்தை தழுவிய படங்கள் அமைந்திருப்பது அதன் சிறப்பு.

இத்தகைய சிறப்பு கொண்ட வள்ளுவர் கோட்டத்தை “வள்ளுவர் கோயில்” என்றும் சிலர் அழைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *