குழந்தைகள் அழும் போது தூங்க வைப்பதற்காகவோ, சமாதானம் செய்யவோ பாடப்படும் பாட்டு “தாலாட்டு”
தால் என்பது நாவைக் குறிக்கும், நாவை ஆட்டி வரவழைக்கும் சத்தம் “தாலாட்டு” எனப்படுகிறது. ஆராரோ ஆரிரரோ என சந்தமிசைத்து பாடுவதால் ஆராட்டுதல் என்றும் சொல்லப்படுகிறது.
ஆராரிரோ ஆரிரரோ:-
ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
மானே மரகதமே – என் கண்ணே
மாசிலாக் கண்மணியே!
ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
அப்பா வருவாரே – என் கண்ணே
ஆசமுத்தம் தருவாரே!
ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
மாமன் வருவாரே – என் கண்ணே
மாங்கனிகள் தருவாரே!
ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
அத்த வந்தாக்கா – என் கண்ணே
அல்லிப்பூ தருவாளே!