ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!

பொது

ஆத்திசூடி என்பது 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி.

aathichchudi

தமிழ்ச் சமுதாயம் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை உணர்த்தும் விதமாகவும் அன்று வழக்கத்திலிருந்த திண்ணைப் பள்ளிகள் குருகுலங்கள் முதல், இன்று பின்பற்றப் படுகிற மெக்காலே கல்வி முறை வரை, தமிழ் கற்கும் போது தமிழின் உயிரெழுத்துக்களைச் சொல்லித் தருகின்ற பொருட்டு ஔவையின் ஆத்தி சூடியைக் கொண்டு கற்பிப்பதை ஆசிரியர்கள் கடைப்பிடித்து வருகின்றார்கள்.
1. அறம் செய விரும்பு
Learn to love virtue.
2. ஆறுவது சினம்
Control anger.
3. இயல்வது கரவேல்
Don”t forget Charity.
4. ஈவது விலக்கேல்
Don”t prevent philanthropy.
5. உடையது விளம்பேல்
Don”t betray confidence.
6. ஊக்கமது கைவிடேல்
Don”t forsake motivation.
7. எண் எழுத்து இகழேல்
Don”t despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி
Don”t freeload.
9. ஐயம் இட்டு உண்
Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு
Emulate the great.
11. ஓதுவது ஒழியேல்
Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல்
Speak no envy.
..
– ஔவையார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *